/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அங்கித்திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு ஜன.9க்கு ஒத்திவைப்புஅங்கித்திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு ஜன.9க்கு ஒத்திவைப்பு
அங்கித்திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு ஜன.9க்கு ஒத்திவைப்பு
அங்கித்திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு ஜன.9க்கு ஒத்திவைப்பு
அங்கித்திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு ஜன.9க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜன 05, 2024 10:55 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு. இவரை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி லஞ்சம் வாங்கியது தொடர்பாக 2023 டிச., 1ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அங்கித்திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அங்கித்திவாரியிடம் விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் நீதின்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா விசாரணையை ஜன.,9க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.