/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சமூக ஆர்வலர்கள் புகாருக்கு நடவடிக்கை கவுன்சிலர்கள் புகார்களுக்கு இல்லையேசமூக ஆர்வலர்கள் புகாருக்கு நடவடிக்கை கவுன்சிலர்கள் புகார்களுக்கு இல்லையே
சமூக ஆர்வலர்கள் புகாருக்கு நடவடிக்கை கவுன்சிலர்கள் புகார்களுக்கு இல்லையே
சமூக ஆர்வலர்கள் புகாருக்கு நடவடிக்கை கவுன்சிலர்கள் புகார்களுக்கு இல்லையே
சமூக ஆர்வலர்கள் புகாருக்கு நடவடிக்கை கவுன்சிலர்கள் புகார்களுக்கு இல்லையே
ADDED : ஜன 05, 2024 04:27 AM
கொடைக்கானல் : ''சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை'' என தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் புகார் கூறினார்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சுவேதராணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்துமாரி, பி.டி.ஓ.,க்கள் ஜெஸி ஞானசேகர், குமரவேல் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் விவாதம்:
முத்துகிருஷ்ணன்(அ.தி.மு.க.,): வில்பட்டி ஊராட்சியில் அனுமதி பெறாமல் கட்டடம், சீல் வைத்த விடுதிகள் செயல்படுவது, ஒன்றிய பணிகளில் முறைகேடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த நிலையில், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு வந்தவர்கள் இதுவரை கடிதம் கொடுக்கப்படாத நிலை உள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
ஜெஸி ஞானசேகர்(பி.டி.ஓ.,): புகார்கள் குறித்து விசாரித்தஅதிகாரிகள் விரைவில் அதற்கான பதில் அளிப்பர்.
மாரியம்மாள் (அ.தி.மு.க.,): மேல்பள்ளம் செல்லும் ரோடு சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
ஜெஸி ஞானசேகர்(பி.டி.ஓ.,):நடவடிக்கை எடுக்கப்படும்.
கார்த்திக் (தி.மு.க.,): சமூக ஆர்வலர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் புகார்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடும் பட்சத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அதே நிலையில் கவுன்சிலர்கள் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை.
ஜெஸி ஞானசேகர்(பி.டி.ஓ.,): அவ்வாறான நிலை இல்லை. கவுன்சிலர்கள் கூறும் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.