ADDED : மார் 26, 2025 05:02 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் ரோட்டோரம் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பழநி, வத்தலக்குண்டு ரோடுகள் பிரதானம் என்ற நிலையில் இவ்விரு வழித்தடங்களிலிருந்து மலையடிவாரத்தியிருந்து கொடைக்கானல் வரை ரோட்டோரம் காய்ந்த, உறுதியற்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. இம்மரங்கள் வனம்,பட்டா நிலங்களில் உள்ளது. 2024ல் மூலையாறு பகுதியில் சுற்றுலா வாகனம் மீது மரம் விழுந்து பயணிகள் சிறு காயத்துடன் தப்பினர். சீசன் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா முக்கியம் வாய்ந்த பாம்பார்புரம் ரோட்டில் காய்ந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.