/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து 'கொடை' ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து
'கொடை' ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து
'கொடை' ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து
'கொடை' ரோட்டில் காய்ந்த மரங்களால் விபத்து
ADDED : செப் 21, 2025 04:33 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரோட்டோரம் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலுக்கு பழநி, வத்தலக்குண்டு ரோடுகள் பிரதானமாகும். இவ்விரு ரோடுகளில் மலையடிவாரத்தியிருந்து கொடைக்கானல் வரை ரோட்டோரம் காய்ந்த ,உறுதியற்ற மரங்கள் ஏராளமாக உள்ளது. இம்மரங்கள் வனம், பட்டா நிலங்களில் உள்ளது. 2023 ல் மூலையாறு பகுதியில் சுற்றுலா வாகனம் மீது மரம் விழுந்து நல்வாய்ப்பாக பயணிகள் சிறு காயத்துடன் தப்பினர்.
நகரில் பாம்பார்புரம் அப்சர்வேட்டரி உள்ளிட்ட சுற்றுலா முக்கியம் வாய்ந்த ரோடுகளில் ஏராளமான மரங்கள் காய்ந்த நிலையில் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் நாள்தோறும் இவ்வாறான ஆபத்து மரங்களை கடந்து செல்கின்றனர்.
இருந்தப் போதும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலை யில் இவ்வகையான மரங்கள் விபத்தை ஏற்படுத்தும்.
மாவட்ட நிர்வாகம் மலை பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.