ADDED : மார் 18, 2025 05:23 AM
வேடசந்துார்: ஆத்துமேடு கலையரங்கம் பின்புறம் ஸ்ரீ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் கேட் உடைக்கப்பட்டு விநாயகர், நந்தி சிலை கீழே தள்ளி விடப்பட்டிருந்தது.
ஹிந்து மக்கள் கட்சி முழு நேர ஊழியர் ராமச்சந்திரன் வேடசந்துார் போலீசில் புகார் செய்தார்.
எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரணை நடத்தியதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கோயில் பூட்டை உடைத்து சிலைகளை கீழே தள்ளி சென்றது தெரிந்தது.