ADDED : பிப் 12, 2024 05:35 AM

பழநி: பழநி ஸ்ரீ ஸ்கந்த சபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கு பெற்ற பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி கிரி விதி அழகு நாச்சியம்மன் கோயில் அருகே நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்களிலிருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
64 உபசாரங்களில் சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து உள்ளிட்ட பாடல்களுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பரதநாட்டியம் ஆடினர். 20 நிமிடங்கள் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கலைஞர்களுக்கு சான்றிதழ்கள்,பதக்கங்களை கலைமாமணி முரளிதரன் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ராமலட்சுமி சுந்தரேசன் குருக்கள் செய்தார்.