ADDED : ஜன 11, 2024 05:03 AM
வடமதுரை, : திண்டுக்கல் அய்யம்பாளையம் சித்துார் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்23.
தனது நண்பரான ஹரிவிக்னேஷ் 23, உடன் ஜன.1ல் டூவீலரில் அய்யலுார் சென்றார். வடமதுரை பைபாஸ் சந்திப்பில் வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த பைரோஸ் 35, தனது தாய் சமீராபாய் 55, உடன் ரோட்டை கடந்த டூவீலருடன் மோதியது. விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சமீராபாய் நேற்று இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.