Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தள்ளாத வயதிலும் தளராத ஆன்மிக யாத்திரை

தள்ளாத வயதிலும் தளராத ஆன்மிக யாத்திரை

தள்ளாத வயதிலும் தளராத ஆன்மிக யாத்திரை

தள்ளாத வயதிலும் தளராத ஆன்மிக யாத்திரை

ADDED : செப் 23, 2025 04:34 AM


Google News
எரியோடு: அரசு பணி ஓய்வு பெற்றவர்கள் வயதால் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் திருஅருள்பேரவை ஒரு சத்சங்கத்தை துவங்கி ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எரியோடு பகுதியில் உள்ள இச் சங்கத்தில் 64 முதல் 94 வயது வரை உள்ளவர்கள் உள்ளனர். 36 ஆண்டுகளாக புரட்டாசி சனிக்கிழமைகளில் 40 கி.மீ., துாரத்திற்குட்பட்ட பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பஜனை, பக்தி இன்னிசை, பக்திச்சொற்பொழிவு, பாராயணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

துவக்க கால பயணத்தில் மக்களிடம் பிரபலமாகாத கோயில்களை கண்டறிந்து முன்னுரிமை தந்து புரட்டாசி சனி யாத்திரை சென்றதால் அவற்றில் பல கோயில்கள் புத்துயிர் பெற்று வளர்ச்சி கண்டுள்ளன.

தற்போது 37வது ஆண்டாக முதல் புரட்டாசி சனிக்கிழமை வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சென்றனர். வரும் சனிக்கிழமைகளில் கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள், ராமகிரி கல்யாணநரசிங்கப் பெருமாள், தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாதபெருமாள் கோயில்களுக்கு செல்கின்றனர்.

கோயில் திருவிழாக்களில் ஊர் நிர்வாகஸ்தர்கள் அழைத்தால் பஜனை, சொற்பொழிவு நடத்தியும், தைப்பூச சீசன் பக்தர்களுக்கு பாத, மருத்துவ, அன்னதான சேவை முகாமும் நடத்தி உதவியும் செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us