ADDED : செப் 14, 2025 03:43 AM

வடமதுரை: வடமதுரை மோளப்பாடியூர் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சிக்கு நல்லாசிரியர் விருதுடன் ரொக்கப் பணம் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதே பள்ளியில் படித்த மாணவி தங்கமணி அரசு பள்ளிகளுக்கான 7.5 ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.,பி.எஸ்., படிக்கிறார். அவருக்கு இப்பணத்தை வழங்கினார். நல்லாசிரியரை கிராம மக்கள் பாராட்டினர்.