ஆத்துாரில் சிலம்பம் சுற்றும் சாதனை
ஆத்துாரில் சிலம்பம் சுற்றும் சாதனை
ஆத்துாரில் சிலம்பம் சுற்றும் சாதனை
ADDED : ஜன 08, 2024 05:21 AM

ஆத்துார், : ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிலம்பம் சுற்றும் சாதனையில் ஏராளமான மாணவர்கள பங்கேற்று அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டது.
ஆத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி 'சி' அறக்கட்டளை சார்பில் 12 மணி நேர இடைநில்லா சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடந்தது. புரவலர்கள் முஜீப், பிலால் தலைமை வகித்தனர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணை செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஆத்துார் கூட்டுறவு கலை கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம், மனோகரன் அறக்கட்டளை நிறுவனர் சாந்தி,கலை இலக்கிய மன்ற மாநில குழு உறுப்பினர் அஜாய்குமார்கோஷ், மாவட்ட செயலாளர் பிரபாகரன்,சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட சிலம்ப ஆசான்கள் 150க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆஃப் ரெகார்ட் நிறுவனர் அரவிந்த் குமார் 12:00 மணிநேர சிலம்ப சாதனையை உறுதி செய்து சான்றளித்தார். பாதிரியார் பெஞ்சமின் போஸ்கோ சிலம்ப ஆசான்,மாணவர்களுக்கு விருது பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் செந்தில்குமார், லெனின் குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.