/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மலை ரோட்டில் சாய்ந்த மரத்தால் 3 மணி நேரம் பாதித்த போக்குவரத்து மலை ரோட்டில் சாய்ந்த மரத்தால் 3 மணி நேரம் பாதித்த போக்குவரத்து
மலை ரோட்டில் சாய்ந்த மரத்தால் 3 மணி நேரம் பாதித்த போக்குவரத்து
மலை ரோட்டில் சாய்ந்த மரத்தால் 3 மணி நேரம் பாதித்த போக்குவரத்து
மலை ரோட்டில் சாய்ந்த மரத்தால் 3 மணி நேரம் பாதித்த போக்குவரத்து
ADDED : செப் 27, 2025 04:34 AM

தாண்டிக்குடி: - தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தாண்டிக்குடி மலைப்பகுதியில் சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்த நிலையில் கானல்காடு பகுதியில் அதிகாலை மரம் விழுந்தது.
நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தாமதமானதால் தாண்டிக்குடி போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இவ்வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


