ADDED : பிப் 12, 2024 05:36 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். சரவண பொய்கை முடி காணிக்கை மையத்தில் சர்வர் பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்தனர்.
அங்கே ஆக்கிரமிப்பு இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி கோயிலில் ரோப்கார் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும்.