/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஸ்டிரைக்கில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்ஸ்டிரைக்கில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்
ஸ்டிரைக்கில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்
ஸ்டிரைக்கில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்
ஸ்டிரைக்கில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 10, 2024 06:31 AM
திண்டுக்கல் : ஓய்வு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் 40 சதவீத போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் மட்டும் பணியில் ஈடுபட்டன . திண்டுக்கல் மண்டலத்தில் 20க்கு மேலான தனியார் ஓட்டுநர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. திண்டுக்கல் கிளை 1 முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டமும் நடந்தது. தலைவர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். மண்டல செயலாளர் கஸ்பார் ராஜ்,பொருளாளர் ராஜேந்திரன்,நிர்வாகி பால்ராஜ் பங்கேற்றனர்.


