/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சிபோலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி
போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி
போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி
போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி
ADDED : பிப் 11, 2024 01:14 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் , தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு 2023 டிசம்பரில் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் பிப். 6-ல் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 918 பேருக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது.
முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் , மார்பளவு அளவிடுதல், 1500 மீட்டர் ஓட்டம் போன்றவை நடந்தது. தொடர்ந்து 2ம் கட்ட உடற்தகுதி தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் , உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் 4 நாட்கள் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி பெற்றனர்.