ADDED : ஜன 13, 2024 04:26 AM
நத்தம், : துவராபதி பகுதியில் எஸ்.ஐ., விஜயபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
துவராபதி புளியமரத்தடி பகுதியில் கும்பல் பணம் வைத்து சூதாடியது. அந்த கும்பலை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் துவராபதி கிராமத்தை சேர்ந்த அஜீத் 25, சதீஸ் 32, அழகன் 45, சேர்வீடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் 40, சின்னாண்டி 47, என்பது தெரிந்தது.இதையடுத்து நத்தம் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.