/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம் 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம்
3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம்
3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம்
3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : செப் 15, 2025 07:01 AM

திண்டுக்கல் : வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் திண்டுக்கல் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பயணிகளை அழைத்து வரும் தனியார் ஆம்னி பஸ்கள் தமிழக அரசுக்கு வரி செலுத்தும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. இந்நிலையில், தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பஸ்கள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக மதுரையில் உள்ள வட்டார போக்குவரத்து இணை ஆணையர் சந்திரசேகருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், வரி செலுத்தாத ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,கண்ணனுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., தலைமையில் அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் திண்டுக்கல் தோமையார்புரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே, பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 3 ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவை வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 ஆம்னி பஸ்களையும் ஆர்.டி.ஓ.,கண்ணன் பறிமுதல் செய்து, அரசுக்கு செலுத்தவேண்டிய வரிபாக்கி, விதிமீறல் அடிப்படையில் 3 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.