/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான ரோடால் பரிதவிக்கும் வடுகப்பட்டி மக்கள் சேதமான ரோடால் பரிதவிக்கும் வடுகப்பட்டி மக்கள்
சேதமான ரோடால் பரிதவிக்கும் வடுகப்பட்டி மக்கள்
சேதமான ரோடால் பரிதவிக்கும் வடுகப்பட்டி மக்கள்
சேதமான ரோடால் பரிதவிக்கும் வடுகப்பட்டி மக்கள்

பாலம் வேண்டும்
எம்.கருப்பத்தேவர், காங்., வட்டார செயற்குழு உறுப்பினர், வடுகப்பட்டி: அய்யலுார், சித்துவார்பட்டி செல்லும் இரு திசை ரோடுகளும் சேதமுற்று கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சீரங்ககவுண்டனுார் ரோட்டில் இருபக்கமும் வளர்ந்திருக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும். இப்பகுதியில் சேதமுற்று விபத்து ஆபத்தாக இருக்கும் மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதுசித்துவார்பட்டி, பழைய சித்துவார்பட்டி இடையே வரட்டாற்றில் பாலம் தடுப்பு துான்கள் இல்லாமல் இருக்கும் பாலம் சேதமாக கிடக்கிறது. இங்கு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
-ரோடை சீரமைக்க வேண்டும்
வி.பால்மூர்த்தி, பா.ஜ., அரசு சாரா பிரிவு மாவட்ட செயலாளர், அய்யலுார்: பாண்டியனுாரிலிருந்து வடுகப்பட்டி, சீரங்ககவுண்டனுாரிலிருந்து பாண்டியனுாரை இணைக்கும் ரோடுகள் சேதமாக உள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ரோடு புதுப்பித்தல் பணி இங்கு நடக்காததால் இந்த அவல நிலை உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். பாண்டியனுாரில் கட்டி முடித்து 15 ஆண்டுகளாக தொட்டியில் விரிசலால் நீர்கசிவு உள்ளது. விபத்து ஏற்படும் முன் புதிய தொட்டியை தரமான முறையில் கட்ட வேண்டும்.
பஸ் வசதி வேண்டும்
எஸ்.மனோகரன், கல்லுாரி மாணவர், வடுகப்பட்டி: வடுகப்பட்டி பள்ளி அருகில் பயனற்று கிடக்கும் கிணறு சுகாதாரக்கேடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் சிரமப்படுகின்றனர்.