ADDED : மார் 12, 2025 06:26 AM
கொடைக்கானல்; கொடைக்கானல் தெரசா பல்கலையில் உயிரி தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து இயற்கை பொருட்கள் மூலம் உருவாக்கிய ஆபரணங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் பயிற்சித் திட்டம்,பழங்குடியினர் மக்களுக்கான இணையதளம் துவக்க விழா நடந்தது. தெரசா பல்கலை துணை வேந்தர் கலா தலைமை வகித்தார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநிலம் மன்ற உறுப்பினர் வின்சென்ட் கலந்து கொண்டனர்.
உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் ரசியா, உஷா ராஜநந்தினி, நபார்டு வங்கி மேலாளர் ஹரிஷ் கலந்து கொண்டனர்.