Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாக்கடை மண் குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு

சாக்கடை மண் குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு

சாக்கடை மண் குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு

சாக்கடை மண் குவியலால் போக்குவரத்துக்கு இடையூறு

ADDED : ஜூன் 26, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
சகதியாக மாறுவதால் சிரமம்

வடமதுரை சித்துாரில் காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் ஏற்பட்டுள்ள கசிவு நீர் நடை பாதையில் பாய்கிறது. பாதை சகதியாக மாறி விடுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். --இதை தடுக்க துறையினர் வழி வகை காண வேண்டும் பழனிச்சாமி, வடமதுரை.

...............-----

சாய்ந்த கேமரா கம்பம்

கொடைக்கானல் பழைய அப்பர் லேக் சந்திப்பு , அப்சர்வேட்டரி செல்லும் மெயின் ரோட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா கம்பம் ரோட்டோரத்தில் விழுந்துள்ளது. குற்ற நிகழ்வுகள் அதிகம் நிகழும் இப்பகுதியில் கம்பத்தை சீரமைக்க வேண்டும். கண்ணபிரான், கொடைக்கானல்.

.........------சேதம் அடைந்த ரோடு

விருப்பாச்சியிலிருந்து தலையூற்று அருவிக்கு செல்லும் தார் ரோடு ஆற்றுப் பாலம் அருகே சேதம் அடைந்து உள்ளது . இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது . இதனை சீரமைக்க துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீரக்குமார் ஒட்டன்சத்திரம்.

..........-----மின்கம்பத்தில் முள் மரம்

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மின்கம்பத்தில் முள் மரம் மோதுவதால் மழை, காற்று நேரங்களில் விபத்து ஏற்படுகிறது . இதன் அருகே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர் .முள் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மருது, திண்டுக்கல்.

.......-----நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது .இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாற நோய் பரவும் அபாயமும் உள்ளது. மகேந்திரன், கொட்டப்பட்டி.

............------

குப்பையால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் அண்ணாநகரில் குப்பை குவிந்துள்ளது. பல நாட்களாக அள்ளாமல் உள்ளது துர்நாற்றம் வீசுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்து சுற்றுசூழலும் பாதிக்கிறது . சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க குப்பையை அகற்ற வேண்டும். வேல்முருகன், திண்டுக்கல்.

............-------

துார்வாரியும் நோ யூஸ்

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் சாக்கடை மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை முறையாக அகற்றாததால் அப்பகுதி முழுவதும் சிதறி மீண்டும் சாக்கடையில் விழுகிறது .போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது .மண்ணை அகற்ற வேண்டும். குரு, திண்டுக்கல்.

....................------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us