/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானலில் வியாபாரிகள், வனத்துறை மோதல்: காலால் உணவுகளை எட்டி உதைத்தாக டி.எப்.ஒ., மீது புகார் கொடைக்கானலில் வியாபாரிகள், வனத்துறை மோதல்: காலால் உணவுகளை எட்டி உதைத்தாக டி.எப்.ஒ., மீது புகார்
கொடைக்கானலில் வியாபாரிகள், வனத்துறை மோதல்: காலால் உணவுகளை எட்டி உதைத்தாக டி.எப்.ஒ., மீது புகார்
கொடைக்கானலில் வியாபாரிகள், வனத்துறை மோதல்: காலால் உணவுகளை எட்டி உதைத்தாக டி.எப்.ஒ., மீது புகார்
கொடைக்கானலில் வியாபாரிகள், வனத்துறை மோதல்: காலால் உணவுகளை எட்டி உதைத்தாக டி.எப்.ஒ., மீது புகார்
ADDED : ஜூலை 10, 2024 11:16 PM

கொடைக்கானல்:கொடைக்கானல் துாண் பாறையில் செபஸ்தியார் சர்ச் உள்ளது. இங்கு வியாபாரிகள் ஆண்டுதோறும் வழிபாடு செய்வர். நேற்று வழிபாடு செய்து உணவு சமைத்துள்ளனர். இதை சுற்றுலா பயணியருடன் பகிர்ந்துள்ளனர்.
வியாபாரிகள் விறகு வைத்து சமைத்தனர். அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா விறகு வைத்து சமைப்பது வன சட்டங்களுக்கு எதிரானது என கண்டித்துள்ளார். வியாபாரிகளோ தாங்கள் பாரம்பரியமாக வழிபாட்டில் ஈடுபடுகிறோம். இதை தடுப்பது நியாயமற்றது என கூற வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டி.எப்.ஓ., உணவு தட்டு, பாத்திரங்கள் டேபிள், சேர்களை காலால் எட்டி உதைத்துள்ளார். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வியாபாரி யுவராஜ், 60 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறோம். முறையாக வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்றே உணவு சமைத்தோம். டி.எப்.ஓ., உணவு பாத்திரங்களை எட்டி உதைத்தார். வியாபாரி பிரபு காயமடைந்தார். அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
யோகேஷ் குமார் மீனா: வன சரணாலய பகுதியில் அனுமதியின்றி வழிபாடு நடத்தியது, விறகுகளை வைத்து சமைத்தது குறித்து எச்சரித்தேன். வியாபாரிகள் தான் அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்றார்.