Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் பஸ்

பழநியில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் பஸ்

பழநியில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் பஸ்

பழநியில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் பஸ்

ADDED : ஜூலை 20, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
பழநி : பழநியில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் செல்லும் ஆன்மிக பஸ் சேவையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.

பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான தண்டபாணி நிலையத்திலிருந்து பிரதி வாரம் வெள்ளிதோறும் இந்த பஸ் புறப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் பதிவுகளை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் இரண்டு நாட்கள் பயணத்திற்கான உணவு, தங்கும் வசதி அடங்கும் .நேற்று இரவு 8 :00மணிக்கு புறப்பட்ட பஸ் இன்று காலை ராணிப்பேட்டை தமிழ்நாடு சுற்றுலா ஓட்டல் செல்கிறது .தனி அறைகள் ஒதுக்கப்பட்டு குளியல் முடித்த பின் காலை உணவு ,அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு மதியம் திருப்பதி செல்ல அங்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் பின் மதிய உணவு,பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சானுார் பகவதி அம்மன் கோயிலில் தரிசனம்,தொடர்ந்து ராணிப்பேட்டை வர இரவு உணவுக்கு பின் மறுநாளான ஞாயிறன்று காலை பழநி வருகிறது .

இதன் துவக்க நிகழ்ச்சியில் எம்.பி., சச்சிதானந்தம், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் ஆர்.டி.ஓ., சரவணன் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கூறியதாவது: ஆன்மிக சுற்றுலாவாக திருப்பதிக்கு இந்த பஸ்ஸில் 32 பேர் செல்லலாம். இன்று ராணிப்பேட்டையில் காலை உணவு பின் மதியம் திருப்பதியில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஞாயிறு காலை பழநி திரும்புவர். வருங்காலத்தில் பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.

இதோடு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பழநி இருந்து திருப்பதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்களை வீடு வீடாக வழங்க தற்போது வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் சாத்திய கூறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us