Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நாளை ஏமூர் பகவதி கோயில் கும்பாபிஷேகம்

நாளை ஏமூர் பகவதி கோயில் கும்பாபிஷேகம்

நாளை ஏமூர் பகவதி கோயில் கும்பாபிஷேகம்

நாளை ஏமூர் பகவதி கோயில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 01, 2024 05:36 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் பெரியகடை வீதி மீன்கார தெருவில் உள்ள ஏமூர்பகவதி, காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூன் 2) நடக்கும் நிலையில் இதற்கான விழா நேற்று துவங்கியது.

இக்கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று (மே 31) காலை 8:00 மணிக்கு மகா கணபதி ஹோம சிறப்பு வழிபாட்டுடன்துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வருதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு நடந்த விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, வேதிகா பூஜையுடன் முதல் கால யாக வேள்வியில் மகாகணபதி, ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இன்று காலை 8:00 மணிக்கு விக்னேஷ்வர, துவார, வேதிகா பூஜையுடன் 2ம் கால யாக வேள்வி நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு யந்திரப்ரதிஷ்டையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் இரவு 9:00 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனையுடன் 3ம் கால யாக பூஜை நடக்க உள்ளது.

நாளை (ஜூன் 2) அதிகாலை 5:30 மணிக்கு 4ம் கால யாகபூஜையுடன் மூலமந்திர ஹோமம், வேதபாராயணம், விஸ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியும்,காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட மஹா கும்பாபிஷேகம் வேத பண்டிதர் பாலாஜி சாஸ்திரிகள் தலைமையில் நடக்க உள்ளது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us