/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தக்காளி விலை விர்... * கிலோ ரூ.65 க்கு விற்பனை தக்காளி விலை விர்... * கிலோ ரூ.65 க்கு விற்பனை
தக்காளி விலை விர்... * கிலோ ரூ.65 க்கு விற்பனை
தக்காளி விலை விர்... * கிலோ ரூ.65 க்கு விற்பனை
தக்காளி விலை விர்... * கிலோ ரூ.65 க்கு விற்பனை
ADDED : ஜூன் 11, 2024 09:12 PM

ஒட்டன்சத்திரம்:வரத்து குறைவு, கோயில் மற்றும் திருமண விழாக்கள் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.65 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் தக்காளி இம்மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டிற்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளது. பற்றாக்குறையை ஈடுகட்ட ஆந்திராவில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் தொடர் சுப முகூர்த்தம், கோயில் விழாக்கள் அதிகம் நடப்பதால் தக்காளியின் தேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது. தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் விலை கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.
ஜூன் 9 ல் கிலோ ரூ. 43 க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.65க்கு விற்பனையானது. தக்காளி விளைச்சல் இல்லாததால் இன்னும் சில நாட்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.