ADDED : ஜூலை 26, 2024 12:25 AM
வேடசந்துார் : வேடசந்துார் விருதலைப்பட்டி தனியார் நுாற்பாலை கம்பி வேலியைத் தாண்டி மூன்று இளைஞர்கள் சாக்குப்பையுடன் செல்வது தெரிந்தது.
அங்குள்ள பணியாளர்கள் பிடித்து கூம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கைத்தியன்கோட்டையை சேர்ந்த கவுதம் 20, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மதுபாலன் 20, விருதலைப்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ஆனந்த் 19, என்பதும் திருடியதும் தெரிய வந்தது. அதன்படி இவர்களை கூம்பூர் எஸ்.ஐ., பாண்டியன் கைது செய்தார். ரூ.23 ஆயிரம் மதிப்பு மின் வயர்களை பறிமுதல் செய்தார்.