/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மூவருக்கு ஆயுள் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மூவருக்கு ஆயுள்
தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மூவருக்கு ஆயுள்
தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மூவருக்கு ஆயுள்
தனியார் நிறுவன ஊழியர் கொலையில் மூவருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 20, 2024 09:31 AM

திண்டுக்கல் : தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார் 28. இவரது சகோதரியை அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் 42, என்பவர் 2013ல் பெண் கேட்டு சென்றார். அசோக்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் செல்வகுமார் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதன் விரோதத்தில் 2013ல் அசோக்குமார், நண்பர்கள் சக்திவேல் 47,அன்புராஜ் 38, சேர்ந்து கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி கலையரங்கம் அருகே நடந்து சென்ற செல்வகுமாரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி மெகபூப் அலிகான் கொலையாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை தலா ரூ.10,000 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.