/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையை அகற்றாது எரிப்பதால் தொற்று பரவும் அபாயம் குப்பையை அகற்றாது எரிப்பதால் தொற்று பரவும் அபாயம்
குப்பையை அகற்றாது எரிப்பதால் தொற்று பரவும் அபாயம்
குப்பையை அகற்றாது எரிப்பதால் தொற்று பரவும் அபாயம்
குப்பையை அகற்றாது எரிப்பதால் தொற்று பரவும் அபாயம்
ADDED : ஜூன் 11, 2024 11:48 PM

பெரும் பள்ளத்தால் விபத்து
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து பின்புற ரோட்டுக்கு செல்லும் பாதையில் பெரிய பள்ளம் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது .பயணிகள் அதிக அளவில் இந்த வழியில் சென்று வருவதால் விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை மூட வேண்டும்.ராஜேஷ் கண்ணன், திண்டுக்கல்..........--------தொட்டியில் இல்லை தண்ணீர்
கன்னிவாடி பஸ் ஸ்டாண்ட் குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் உள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர் . தினமும் ஏராளமானோர் வந்து செல்வதால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரகுரு, கன்னிவாடி ..............---------
புதர் மண்டிய கால்வாய்
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 4வது குறுக்கு தெருவில் மழை நீர் கால்வாய் குப்பை சேர்ந்து புதர் மண்டி உள்ளதால் மழை நேரங்களில் தண்ணீர் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது .இதனால் மழை தண்ணீர் ரோட்டில் செல்கிறது. கால்வாயை துார்வார வேண்டும். கருப்பணன், திண்டுக்கல்.
......---------
குப்பையை எரிப்பதால் திணறல்
திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பையை அள்ளாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புகை மண்டலம் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும்.ராஜேஷ், திண்டுக்கல்.
.........--------மின்கம்பத்தால் விபத்து
அம்மையநாயக்கனுார் பேரூராட்சி ஏ.புதுாரில் வளைந்த நிலை மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது .மழை நேரங்களில் மின்கசிவும் ஏற்படுகிறது .அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை .இதை சரி செய்ய வேண்டும் க.ரதிஷ்பாண்டியன் -பொம்மணம்பட்டி.
.........---------சேதமடைந்த ரோடு
கோபால்பட்டி அருகே பூவகிழவன்பட்டி ராமராஜபுரம் செல்லும் ரோடு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகிறது .சாலையை சீரமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகமது இஸ்மாயில் ,வேம்பார்பட்டி.
........---------பெயர் பலகை சேதம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி கூடலிங்கபுரத்தில் பெயர் பலகை சேதமடைந்துள்ளது. இதனால் ஊர் பெயர் தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் .பெயர் பலகையை புதுப்பிக்க உள்ளாட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமாள் ஒட்டன்சத்திரம்..........----------