/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தலையில் கல்லைப் போட்டு தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் தலையில் கல்லைப் போட்டு தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்
தலையில் கல்லைப் போட்டு தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்
தலையில் கல்லைப் போட்டு தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்
தலையில் கல்லைப் போட்டு தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்
ADDED : ஜூன் 01, 2024 05:44 AM

வேடசந்துார்: வேடசந்துார் காக்காத்தோப்பூரில் தந்தையை அரிவாளால் வெட்டி கீழே சாய்த்து தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.வேடசந்துார் காக்காத்தோப்பூரை சேர்ந்தவர் நூற்பாலை தொழிலாளி பெருமாள் 60. இவரது மகன் வெங்கடாசலம் 33. திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த தனது தங்கையுடன் சண்டை போட்டு அவரை அடித்து உள்ளார். வீட்டில் இருந்த பிரிட்ஜ், கண்ணாடி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தார்.
இதை தந்தை பெருமாள் கண்டித்துள்ளார்.
ஆத்திரமடைந்த வெங்கடாஜலம் தந்தை பெருமாளை அரிவாளால் வெட்டி உள்ளார்.
இதில் சாய்ந்த அவரது தலையில் அம்மிக்கல்லை எடுத்து போட்டு கொலை செய்தார்.
அக்கம்பக்கத்தினர் வெங்கடாஜலத்தை பிடித்து வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தனர். அதன் படி போலீசார் அவரை கைது செய்தனர்.