Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எட்டு ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட பெருமாள் கோயில் பொதுமக்கள் சமாதானத்தால் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு

எட்டு ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட பெருமாள் கோயில் பொதுமக்கள் சமாதானத்தால் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு

எட்டு ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட பெருமாள் கோயில் பொதுமக்கள் சமாதானத்தால் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு

எட்டு ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட பெருமாள் கோயில் பொதுமக்கள் சமாதானத்தால் அதிகாரிகள் முன்னிலையில் திறப்பு

ADDED : ஜூன் 20, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே எட்டு ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட பெருமாள் கோயில் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

தாடிக்கொம்பு பேரூராட்சி டி.அய்யம்பாளையத்தில் விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன்

கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களின் நகைப்பெட்டி ஒருசமூகத்திற்கு சொந்தமான பெருமாள் கோயிலில் வைக்கப்படுவது வழக்கம்.

பெருமாள் கோயில் உரிமை சம்பந்தமாக 2012 ல் இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 2016 ல் பெருமாள் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

8 ஆண்டுகள் கடந்த நிலையில் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் பெருமாள் கோயில் குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்டது என்றும் அதில் நகை பெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் மட்டும் உரிமை உண்டு என முடிவானது.

இதைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பெருமாள் கோயில் சீல் நேற்று மதியம் தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் அகற்ற

கோயில் திறக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us