ADDED : ஜூன் 28, 2024 01:20 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, வசந்தன், கண்ணன்,ஜாபர்சாதிக் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று அதிகாலை தாடிக்கொம்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மூடைகளை கட்டிக்கொண்டு கடைகள் முன் பகுதியில் நின்று தேவையான அளவு புகையிலை பொருட்களை சப்ளை செய்தார். அவரை பிடித்து விசாரித்ததில் எரியோட்டை சேர்ந்த பாலு என்பது தெரிந்தது. ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.