/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில ஹாக்கி போட்டி; வாடிப்பட்டி அணி வெற்றி மாநில ஹாக்கி போட்டி; வாடிப்பட்டி அணி வெற்றி
மாநில ஹாக்கி போட்டி; வாடிப்பட்டி அணி வெற்றி
மாநில ஹாக்கி போட்டி; வாடிப்பட்டி அணி வெற்றி
மாநில ஹாக்கி போட்டி; வாடிப்பட்டி அணி வெற்றி
ADDED : ஜூலை 30, 2024 05:54 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாநில ஹாக்கி போட்டியில் வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.
மாவட்ட ஹாக்கி சங்கம், பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆர் .வள்ளிநாயகி நினைவு சுழல் கோப்பைக்கான மாநில போட்டியில் திண்டுக்கல், மதுரை, கரூர், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன.இறுதி போட்டியில் வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன் தலைமை வகித்தார். பட்டேல் ஹாக்கி அகாடமி செயலாளர் ஞானகுரு முன்னிலை வைத்தார்.
ஆலோசகர் சகாய செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமானுஜம், சங்க துணைத் தலைவர் சாமிநாதன், உதவி செயலாளர் மகேஸ்வரன், துணைத் தலைவர்கள் சீனிவாசன், அரபு முகமது முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு அலுவலர் சிவா, தி.மு.க., பகுதி செயலர் ராஜேந்திர குமார் பேசினர்.
மேயர் இளமதி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழை வழங்கினார்.
கால்பந்து கழக துணைத் தலைவர் ஈசாக், வள்ளிநாயகி அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் விக்டர் ராஜ் கலந்து கொண்டனர்.