/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாக்கடை பாலம் சேதம்; நாய்கள்,கொசுக்களால் அவதி பரிதவிப்பில் பழநி 20 வது வார்டு மக்கள் சாக்கடை பாலம் சேதம்; நாய்கள்,கொசுக்களால் அவதி பரிதவிப்பில் பழநி 20 வது வார்டு மக்கள்
சாக்கடை பாலம் சேதம்; நாய்கள்,கொசுக்களால் அவதி பரிதவிப்பில் பழநி 20 வது வார்டு மக்கள்
சாக்கடை பாலம் சேதம்; நாய்கள்,கொசுக்களால் அவதி பரிதவிப்பில் பழநி 20 வது வார்டு மக்கள்
சாக்கடை பாலம் சேதம்; நாய்கள்,கொசுக்களால் அவதி பரிதவிப்பில் பழநி 20 வது வார்டு மக்கள்

தேவை தனி ரேஷன்கடை
பாண்டியம்மா தேவி, குடும்ப தலைவி ,பசும்பொன் முத்துராமலிங்கதேவர் வீதி: தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது. குடிநீர் பைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை மோசமடைந்து உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வீதி சேதமடைந்துள்ளது. முதியவர்கள் நடமாட இயலாமல் சிரமம் அடைகின்றனர். தனி ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
சாலை சேதத்தால் அச்சம்
நாகரத்தினவேல், ஓய்வு தனியார் ஊழியர் .பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வீதி: தெரு நாய்கள் வீடு மற்றும் தெருக்களில் அசிங்கம் செய்து வருவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மக்கள் பயன்பாடு இல்லாத பகுதிகளில் நாய்கள் தஞ்சம் அடைந்து பெருகி வருகிறது. நகராட்சி சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகனங்களில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.
குடிகாரர்களால் அச்சம்
வளர்மதி, குடும்ப த்தலைவி, வெள்ளை நாடார் தெரு: வார்டு முகப்பு பகுதியில் சாலை ஓரங்களில் குடிகாரர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கோயில் அருகே தெருக்களை துாய்மைப்படுத்த பணியாளர்களை நியமிக்க வேண்டும். வெளி ஆட்கள் கோயில் அருகே சுகாதாரக் கேடு ஏற்படுத்துகின்றனர். குடிமகன்கள் தொல்லை இரவு நேரங்களில் உள்ளது.வெள்ளை நாடார் தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அதிகரிக்க வேண்டும். குப்பை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்கள் கட்டுப்படுத்தப்படும்
பத்மினி, கவுன்சிலர்(காங்.,) : தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியில் பேசி உள்ளேன். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.