ADDED : ஜூன் 17, 2024 12:28 AM
வத்தலக்குண்டு: சாந்திபுரம் பிரிவு அருகே பட்டா நிலத்தில் அனுமதியின்றி ஜே.சி.பி.
ஹிட்டாச்சி வாகனங்களுடன் 3 நாட்களாக மணல் அள்ளி வந்தனர். நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் மணல் அள்ளியதால் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தனர். நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி இடத்தை பார்வையிட்டு மண் அள்ளிய இயந்திரங்கள், வாகனங்களை பறிமுதல் செய்து விருவீடு போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தலையீடு இருப்பதால் வழக்கு பதிவதில் இழுபறி நீடித்தது.