/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளிகளுக்கும் தேவை பாதுகாப்பு சட்டம் பிரைமரி, நர்சரி, பள்ளிகளுக்கும் தேவை பாதுகாப்பு சட்டம் பிரைமரி, நர்சரி,
பள்ளிகளுக்கும் தேவை பாதுகாப்பு சட்டம் பிரைமரி, நர்சரி,
பள்ளிகளுக்கும் தேவை பாதுகாப்பு சட்டம் பிரைமரி, நர்சரி,
பள்ளிகளுக்கும் தேவை பாதுகாப்பு சட்டம் பிரைமரி, நர்சரி,
ADDED : ஜூலை 28, 2024 08:21 AM

திண்டுக்கல் : ''தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றியது போல் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்'' என தமிழ்நாடு பிரைமரி ,நர்சரி ,மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ,சி,பி,எஸ்,இ ,லபள்ளி சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
திண்டுக்கல் சீலப்பாடி வித்யா பார்த்தி மேல்நிலைப் பள்ளியில் நடந்த சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கணவாய் பட்டி பள்ளி நிர்வாகி ராஜேந்திரனை தாக்கிய மாணவனின் பெற்றோர் நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டுகிறோம். பள்ளி நிர்வாகிகளை தாக்கி பள்ளி சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அரசு பாதுகாப்புச் சட்டம் இயற்றியது போல் அரசு , தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும். வேண்டும்.
டி.சி .இல்லாமல் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்ப்பது தவறாகும். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். தனியார் பள்ளிகளிடம் சொத்து வரியை அதிகாரிகள் மிரட்டி வசூலிக்கிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளோம். அதுவரைக்கும் தனியார் பள்ளிகளை ஜப்தி செய்வதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் . ஆர்.டி.இ., யில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் கூடாது என நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றார்.
மாவட்ட தலைவரும் வித்யா பார்த்தி பள்ளி குழும தலைவருமான கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
செயலாளர் சந்திரசேகர் முன்னிலை விகித்தார் பொருளாளர் ரவி உட்பட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.