/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி மாணவர்கள் தர்ணா, தற்கொலைக்கு முயன்ற பெண்; 2 மாதத்திற்கு பின் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள் பள்ளி மாணவர்கள் தர்ணா, தற்கொலைக்கு முயன்ற பெண்; 2 மாதத்திற்கு பின் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
பள்ளி மாணவர்கள் தர்ணா, தற்கொலைக்கு முயன்ற பெண்; 2 மாதத்திற்கு பின் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
பள்ளி மாணவர்கள் தர்ணா, தற்கொலைக்கு முயன்ற பெண்; 2 மாதத்திற்கு பின் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
பள்ளி மாணவர்கள் தர்ணா, தற்கொலைக்கு முயன்ற பெண்; 2 மாதத்திற்கு பின் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
ADDED : ஜூன் 11, 2024 06:44 AM

திண்டுக்கல் : தர்ணாவில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், தற்கொலைக்கு முயன்ற பெண் என்பன போன்ற பிரச்னைக்கு இடையே திண்டுக்கல்லில் 2 மாதம் பின் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 231 பேர் பல்வேறு குறைகளுடன் கலெக்டரிடம் முறையிட்டனர்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த நிலையில் 2 மாதங்களுக்கு பின் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் 231 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கு திருமணம், கல்வி, இயற்கை மரண நிதி உதவித்தொகைகள் என 178 பயனாளிகளுக்கு ரூ.20.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தர்ணாவில் பள்ளி மாணவர்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முதல் நாள் பள்ளியை புறக்கணித்து 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் முகேஷ, மாணவர் சங்க மாவட்ட செயலர் நிருபன் தலைமையில் நடந்த இதில், எம்.வி.எம்., கல்லுாரி அருகே செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 ஆண்டு முன்பு கட்டப்பட்ட புதிய கட்டடம் 4 வழிச் ரோட்டை தாண்டி கட்டியதால் மாணவர்கள் ரோட்டை கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன.
பள்ளிக்கு பின்புறம் 500 மீட்டருக்கு ஓரடுக்கு மெட்டல் ரோடு அமைக்கப்பட்டும் பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை மறுக்கிறது. கலெக்டர் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண கோரினர்
தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தை சேர்ந்தவர் மேனகா 37. பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
விசாரணையில் அவர் மயக்க மாத்திரைகள் சாப்பிட்டது தெரிய வந்தது. மேனகா தெரிவித்ததாவது: ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த தினேஷ்க்கும், எனக்கும் தொழில் போட்டி உள்ளது.
என்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினார்.
வீடியோவின் உண்மைத் தன்மை அறியாமல் குடும்பத்தினர் உட்பட அனைவரும் தவறாக பார்க்கின்றனர்.
சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.