ADDED : ஜூன் 22, 2024 05:57 AM
ஒட்டன்சத்திரம்: லெக்கையன்கோட்டையிலிருந்து மடத்துக்குளம் வரை புதிய பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
பைபாஸ் ரோட்டிலிருந்து சர்வீஸ் ரோடு வழியாக தாராபுரம், கோவை திருப்பூர் செல்லலாம். சர்வீஸ் ரோடு வழியாக வரும் கனரக வாகனங்கள் தாராபுரம் ரோட்டில் திரும்புவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. கண்டெய்னர் லாரிகள் ஒரே முயற்சியில் திரும்ப முடியாது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருதி தாராபுரம் ரோட்டில் ரவுண்டானா அமைத்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.