ADDED : ஜூலை 20, 2024 12:53 AM
திண்டுக்கல் : ஆர்.எம்.காலனி பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆர்.எம்.காலனி முழுவதும் ஆய்வு செய்து ரோட்டோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பேனர்களை அகற்றினர். அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.