ADDED : ஜூன் 08, 2024 05:52 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நேற்று மாலை 5:45 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்து 6:30 மணி வரை நீடித்தது.
திருச்சிரோடு,பழநி ரோடு,நத்தம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ரோடுகளில் தேங்கியது. வாகன ஓட்டிகள் மழைக்கு பயந்து ரோட்டோர கடைகளில் தஞ்சம் புகுந்தனர். மாலை நேரம் என்பதால் மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.