/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ புதர் மண்டிய குமாரசமுத்திரம் குளம் புதர் மண்டிய குமாரசமுத்திரம் குளம்
புதர் மண்டிய குமாரசமுத்திரம் குளம்
புதர் மண்டிய குமாரசமுத்திரம் குளம்
புதர் மண்டிய குமாரசமுத்திரம் குளம்

வெளியேறி வீணாகும் நீர்
கன்னியப்பன், பாசன விவசாயிசங்க உறுப்பினர் : குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறும் பகுதி சேதமடைந்து உள்ளது. குளத்தில் தண்ணீர் வர துவங்கினாலே தண்ணீர் நீர்மட்ட சுவற்றின் உள்ள துளைகளின் வழியே வெளியேறி வீணாகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க நீர்மட்டத்தை சீரமைக்க வேண்டும்.
துார்வாரலாமே
மோகன்குமார், விவசாயி: குளத்திலிருந்து உடைய குளம், சக்கரை கவுண்டன் குளம், அதிகாரி குளம் ஆகியவற்றிற்கு தண்ணீர் செல்லும் ஓடை புதர் மண்டி உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் குளத்திலிருந்து வெளியேறும் போது போதுமான நீர் மற்ற குளங்களுக்கு செல்லாமல் விலை நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.இதை துார்வார வேண்டும்.
குளம் முழுவதும் செடி மரங்கள்
கிருஷ்ணன், பாசன விவசாயிகள் சங்க தலைவர்: குமார சமுத்திரம் குளம் நிறைந்தாலும் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குளம் முழுவதும் செடி, மரங்கள் மண்டி உள்ளது. இவற்றை அகற்றி குளத்தின் மண்ணை துார்வாரி குளத்தின் நீர் தேங்கும் தன்மையை அதிகரிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுங்க
ஹரிஹரன், பாசன விவசாயி : குளத்தில் முறையாக தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் அளவு குறைந்து வருவதால் வரத்து வாய்க்கால்கள் ,குளம் ஆகியவற்றை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.