போலீஸ் செய்திகள்... - திண்டுக்கல்
போலீஸ் செய்திகள்... - திண்டுக்கல்
போலீஸ் செய்திகள்... - திண்டுக்கல்
ADDED : ஜூன் 29, 2024 04:54 AM
வழிப்பறி செய்தவர்கள் கைது
திண்டுக்கல்: பிஸ்மிநகரை சேர்ந்த கவரிங் வியாபாரி லோகேந்திரா 33. நேற்று முத்தழகுபட்டியில் நடந்து சென்றார். அதே பகுதியை சேர்ந்த அஜித்பாண்டி,மேட்டுப்பட்டியை சேர்ந்த தளபதி இருவரும் வழிப்பறி செய்து தப்பினர். போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி தலைவருக்கு மிரட்டல்
வடமதுரை : சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க., துணைச் செயலாளர் வீராச்சாமி மனைவி விஜயா 48. கம்பிளியம்பட்டி ஊராட்சி தலைவராக உள்ளார். புது கலிங்கம்பட்டி பகுதியில் ஊராட்சி குடிநீர் குழாயை சேதம் செய்யப்பட்டதை கண்டித்ததால், செல்வமுருகன் 35, அவரது நண்பர் அம்மாபட்டி பழனிக்குமார் 34, ஊராட்சி தலைவரை அசிங்கமாக பேசி மிரட்டினர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
டூ வீலர்கள் மோதல்
தாடிக்கொம்பு : திண்டுக்கல் அங்கு நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் 73. டூவீலரில் மாரியம்மன் கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த டூ வீலர் மோதியது. இதில் சங்கரநாராயணன் காயமடைந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.