/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆமை வேகத்தில் சாக்கடை பணி பரிதவிப்பில் மக்கள்,வியாபாரிகள் ஆமை வேகத்தில் சாக்கடை பணி பரிதவிப்பில் மக்கள்,வியாபாரிகள்
ஆமை வேகத்தில் சாக்கடை பணி பரிதவிப்பில் மக்கள்,வியாபாரிகள்
ஆமை வேகத்தில் சாக்கடை பணி பரிதவிப்பில் மக்கள்,வியாபாரிகள்
ஆமை வேகத்தில் சாக்கடை பணி பரிதவிப்பில் மக்கள்,வியாபாரிகள்
ADDED : ஜூன் 29, 2024 04:55 AM

வேடசந்துார், ; வேடசந்துார் வடமதுரை ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகே சாக்கடை அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள 12 கடைகள் ,நான்கு வீடுகள் மட்டுமின்றி தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள வீதியில் செல்வதற்கான சிறு பாலம் துண்டிக்கப்பட்டதால் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்று வரை மிகுந்த அவதிக்கு ஆளாகி சுற்றி செல்கின்றனர்.
சாக்கடை பணி 80 சதவீதம் முடிந்த நிலையில் பணி முடிந்த பகுதியில் முறையாக அதற்கான மூடி அமைத்து மண்ணை நிரவி விட்டால்தான் கடைகளுக்கு செல்ல முடியும். அதேபோல் திருமண மண்டபம் அருகே உள்ள சிறு பாலத்தை கட்டி முடித்தால்தான் எம்.ஜி.ஆர்., நகர் பகுதி மக்கள் எளிதாக கடந்து செல்ல முடியும். சாக்கடை பணியை முறையாக முடிக்காததால் இப்பகுதியில் உள்ள 12 கடைகள் , நுாற்றுக்கு மேற்பட்ட வீடுகளின் மக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகுந்த பதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
பணி காரணமாக இந்தப் பகுதியில் உள்ள உணவு விடுதி, மாவுக்கடை உள்ளிட்ட கடைகள் முடி கிடப்பதால் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
நகர் பகுதியில் நடக்கும் சாக்கடை பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக முடித்து மூடி அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.