Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குண்டும் குழியுமான ரோடுகளால் பரிதவிக்கும் மக்கள்...

குண்டும் குழியுமான ரோடுகளால் பரிதவிக்கும் மக்கள்...

குண்டும் குழியுமான ரோடுகளால் பரிதவிக்கும் மக்கள்...

குண்டும் குழியுமான ரோடுகளால் பரிதவிக்கும் மக்கள்...

ADDED : ஜூன் 17, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
ரோட்டோரங்களில் மரங்கள்

நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அம்மன் குளம் பகுதியில் பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டோரம் மரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. ரோட்டோரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகுபர் சாதிக்,நத்தம்.------

விபத்துக்களை ஏற்படுத்தும் குழிகள்

கன்னிவாடி -ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஆண்டரசன்பட்டி சர்வீஸ் ரோடு சந்திப்பில் தோண்டப்பட்ட குழி, பல மாதங்களாக மூடவில்லை. இதனால் இவ்வழியில் இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.வேலாயுதம், ஆண்டரசன்பட்டி.--------

பள்ளத்தால் பரிதவிக்கும் மக்கள்

வடமதுரை ஏ.வி.பட்டியிலிருந்து தொட்டைய கவுண்டனுார் ரோட்டில் பாலம் அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இங்கு சீரமைப்பு பணியை அதிகாரிகள் செய்ய வேண்டும். பூபதி, வடமதுரை.---------

குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல் நந்தவனப்பட்டி சர்வீஸ் ரோடு அருகே குப்பை அள்ளப்படாமல் குவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக அப்படியே இருப்பதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார். திண்டுக்கல்.---------

சேதமான பாதாள சாக்கடை மூடி

திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழித்தடத்தில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஸ்வநாதன், திண்டுக்கல்.---------

குண்டும் குழியுமான ரோடுகள்

நிலக்கோட்டை நுாத்துலாபுரம் ஊராட்சி குளத்துப்பட்டி ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கிறது. மழை நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். புதிதாக ரோடு அமைக்க வேண்டும். க.ரதிஷ் பாண்டியன் - பொம்மணம்பட்டி,---------

கிடப்பிலிருக்கும் கால்வாய் பணிகள்

ஆத்துார் தாலுகா அய்யம்பாளையத்திலிருந்து சித்துார் செல்லும் ரோட்டில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதையில் விடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகிறது. கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மணிகண்டன், அய்யம்பாளையம்.--------

...........................................





      Our Apps Available On




      Dinamalar

      Follow us