/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான ரோடுகளால் தடுமாறும் மக்கள்.... சேதமான ரோடுகளால் தடுமாறும் மக்கள்....
சேதமான ரோடுகளால் தடுமாறும் மக்கள்....
சேதமான ரோடுகளால் தடுமாறும் மக்கள்....
சேதமான ரோடுகளால் தடுமாறும் மக்கள்....
ADDED : ஜூன் 10, 2024 05:40 AM

சேதமான எச்சரிக்கை போர்டு
வேடசந்துார் -அழகாபுரி ரோட்டில் வெரியம்பட்டி அடுத்துள்ள இரண்டு வளைவுகளில் எச்சரிக்கை போர்டு சேதமடைந்து கம்பி மட்டுமே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விபத்து அபாயம் உள்ளது. எச்சரிக்கை போர்டுகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனிச்சாமி, வேடசந்துார்.-------........
ரோடுகளால் தடுமாறும் மக்கள்
அம்மையநாயக்கனுார் பேரூராட்சி ஏ.புதுார் கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். ரோடை சீரமைக்க வேண்டும். க.ரதிஷ்பாண்டியன் - பொம்மணம்பட்டி--------........
மந்தமான பணிகளால் அவதி
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் பாதாள சாக்கடைக்கு புதிய மூடிகள் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்து நடக்கிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மணி,ரவுண்ட் ரோடு.---------........
அச்சுறுத்தும் மருந்தக கட்டடம்
ஆத்துார் ஒன்றியம் அய்யம்பாளையம் கால்நடை மருந்தக கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் ஒழுகுகின்றது. விபத்து ஏற்படும் முன் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன்,அய்யம்பாளையம்.----------......
துார்வாராத கால்வாயால் கேடு
பழநி -திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப்பிலிருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் சாக்கடை கால்வாய் துார்வாராமல் கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்வதால் கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும். கோபி,பழநி.----------.......
மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்
திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் ரோடு மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா, திண்டுக்கல்.----------
......
குப்பையால் உருவாகும் சீர்கேடு
நிலக்கோட்டை காமராஜர் நகர் 8வது வார்டில் தேங்காய் மட்டைகள்,குப்பை அகற்றாமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே குப்பை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்காய் மட்டை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சினேகா பொன்வாலி,நிலக்கோட்டை.----------