ADDED : ஜூலை 23, 2024 05:42 AM

திண்டுக்கல்: ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தண்ணீர் தொட்டி, மின்மோட்டார் இயக்குனர்கள், பணியாளர்கள், காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டியு., மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட குழு உறுப்பினர் பாலசந்திர போஸ், பொருளாளர் தவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், மோகனா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் பிரபாகரன் பேசினார்.