/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 60 பவுன் நகை கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 60 பவுன் நகை கொள்ளையில் வடமாநில வாலிபர்கள்
60 பவுன் நகை கொள்ளையில் வடமாநில வாலிபர்கள்
60 பவுன் நகை கொள்ளையில் வடமாநில வாலிபர்கள்
60 பவுன் நகை கொள்ளையில் வடமாநில வாலிபர்கள்
ADDED : ஜூன் 26, 2024 06:49 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொறியாளர் வீட்டில் திருமணத்திற்காக வாங்கி வைத்த 60 பவுன் நகைகளை 2 வடமாநில வாலிபர்கள் திருடியது போலீசார் விசாரணையில் தெரிய வர அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொறியாளர் ரமேஷ். இவரது மகளுக்கு 2 மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக ரமேஷ்,60 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். இதனிடையே ஜூன் 22 ல் ரமேஷ் பேகம்பூரில் உள்ள தன் அண்ணன் வீட்டில் மனைவியோடு தங்கினார். ஜூன் 23 மாலை வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 60 பவுன் நகை ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேற்கு போலீசார் எதிர்வீடு சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் வடமாநில வாலிபர்கள் இருவர் நள்ளிரவில் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதன்படி தனிப்படை போலீசார் இருவரையும் பிடிக்க வெளி மாநிலம் சென்றுள்ளனர்.