ADDED : ஜூன் 19, 2024 05:59 AM
பயனீட்டாளர் குறைதீர் முகாம்
திண்டுக்கல் : மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 20) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறைதீர் முகாம் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் கீதா நேரில் குறைகளை கேட்டறிகிறார். மின் பயனீட்டாளர்கள் மின் வாரியம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கமிஷனர் ஆய்வு
திண்டுக்கல்: மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ரவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
ஜம்புத்தீவு பிரகடன ஆண்டுவிழா
சின்னாளபட்டி :காந்திகிராம பல்கலையில் அரசியல் அறிவியல் , மேம்பாட்டு நிர்வாகத்துறை சார்பில் ஜம்புத்தீவு பிரகடனத்தின் 224வது ஆண்டுவிழா நடந்தது. பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசியல் அறிவியல் மேம்பாட்டு நிர்வாக துறை இணை பேராசிரியர் சோன்கோகின்கோகிப் வரவேற்றார். முன்னாள் பேராசிரியர் ரகுபதி, சமூக அறிவியல் புல தலைவர் வேலுமணி முன்னிலை வகித்தனர். பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் துவக்கி வைத்தார். உதவி பதிவாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.