/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் சொல்கிறார் நயினார் நாகேந்திரன் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூலை 03, 2024 02:12 AM
திண்டுக்கல்:''2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பா.ஜ., ஒரு முறை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன்பின் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்,'' என, திண்டுக்கல்லில் நடந்த லோக்சபா தொகுதி ஆய்வு கூட்டத்தில் பா.ஜ., மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., தோல்வியடைந்தது குறித்து எவரும் கவலைப்பட வேண்டியதில்லை.
நம் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தலை பொறுத்தவரை பொருளாதாரம், தேர்தல் யுக்திகள் என பல யுக்திகள் கையாளப்பட்டன.
தைரியமாக அடுத்து உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராக வேண்டும். நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் கீழே இறங்கி பணியாற்ற வேண்டும்.
பணம் என்பதைக் காட்டிலும் மக்களை அதிகளவில் சந்திக்க வேண்டும். நாம் இருக்கிற பகுதியில் உள்ள மக்களின் நல்லது, கெட்டது என அனைத்து விஷயங்களுக்கும் துணை நிற்க வேண்டும்.
இதுவே மக்களிடம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள உதவும். மக்களோடு மக்களாக பா.ஜ., இருந்தால் ஓட்டு வங்கி உயரும்.
மாற்றுக்கட்சிகளிலிருந்து பா.ஜ.,வில் இணைவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதன் மூலம் மேலும் பலர் பா.ஜ.,வில் இணைய முன் வருவர்.
தி.மு.க., 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் பிரயோஜனம் இல்லை.
தேர்தல் கூட்டணி போன்ற விஷயங்கள் குறித்து தொண்டர்கள், நிர்வாகிகள் கவலை கொள்ளாமல் களப்பணியாற்றுங்கள். கடுமையாக உழையுங்கள் வெற்றி பெறலாம் என்றார்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் தனபாலன், கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.