ADDED : ஜூன் 17, 2024 12:30 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டை என். ஊத்துப்பட்டியில் முத்தாலம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவில் வானவேடிக்கையுடன் அம்மன் அழைப்பு நடந்தது.
2ம் நாள் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல்,அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அம்மன் வீதியில் நகர்வலம் வந்து தரிசனம் தந்தார். கிராம மக்கள் மஞ்சள் நீராட்டுடன் அம்மனை வழிபட்டு, பூஞ்சோலை கொண்டு சென்றனர்.