ADDED : ஜூலை 18, 2024 05:28 AM
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க கந்துாரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரவுண்ட் ரோடு புதுாரில் அசேன் உசேன் மக்கான் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு கந்துாரி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 85ம் ஆண்டு விழா நேற்று காலை பாத்தியா தொழுகையுடன் தொடங்கியது.
சாதி, மத பாகுபாடின்றி ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு பஞ்சா ஊர்வலம் நடந்தது.
வேடசந்துார்: சாலை தெரு பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மொகரம் பண்டிகையான நேற்று வெட்ட வெளியில் கூட்டாஞ்சோறு சமைத்தனர். தெருவில் உள்ள அனைவருக்கும் விருந்தளித்தனர்.