/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வழக்கறிஞர்கள் ரயில் மறியல்: தள்ளு முள்ளு வழக்கறிஞர்கள் ரயில் மறியல்: தள்ளு முள்ளு
வழக்கறிஞர்கள் ரயில் மறியல்: தள்ளு முள்ளு
வழக்கறிஞர்கள் ரயில் மறியல்: தள்ளு முள்ளு
வழக்கறிஞர்கள் ரயில் மறியல்: தள்ளு முள்ளு
ADDED : ஜூலை 11, 2024 06:25 AM

திண்டுக்கல்: புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறுவதை வலியுறுத்தி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசார் வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் முன் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கென்னடி,பொருளாளர் ஜெயலட்சுமி,இணை செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். இவர்கள் ரயில்வே ஸ்டேஷன் செல்வதை தடுக்கும் வகையில் வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,ராஜகோபால் தலைமையிலான போலீசார் ரயில்வே ஸ்டேஷன் முன்பு பேரிக்கார்டு, கயிறுகள் கட்டி நின்றனர். வழக்கறிஞர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்தனர். அங்கு 2 வது பிளாட்பாரத்தில் நின்ற ரயில் இன்ஜின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து வெளியே வந்தனர். பாதுகாப்பு பணி போலீசார் வழக்கறிஞர்களை அரசு பஸ்சில் ஏற்றி பழைய நீதிமன்றத்தில் இறக்கிவிட்டனர்.