ADDED : ஜூலை 10, 2024 05:07 AM
பழநி : பழநி நகராட்சி 25 வது வார்டு அ.தி.மு.க., சார்பில் கவுன்சிலர் ஜென்னத்துல் பிர்தவுஸ் தலைமையில் 10.12 வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் கலந்து கொண்டனர்.